நிமிர்ந்து நில் தமிழா பொங்கல் கவிதை போட்டி
தமிழனே
உலகமே உன்னை பார்த்து வியக்கிறது
உன் கால் படாத தேசம்
இந்த தரணியில் இல்லை
சிறு நில மன்னன் நீ
சினத்தோடு ஆங்கிலேயனை எதிர்த்த
வீரம் யாரிடமும் இல்லை
எதிரி ஒடுங்க உன்
ஒற்றுமை தான் முதல் காரணம்
பன்னிரண்டு கோடி மக்கள் சக்தி
மகத்தான சக்தி
அதை மறந்தோம் நாம்
ஆட்டு மந்தைகளாய் நாமிருந்தால்
ஆயிரம் கோடி பேர் இருந்தும் பயன் என்ன ?
இனம் ஒன்று இலங்கையிலே
அழியும் போது சினம் கொண்டோம்
உணவில் உப்பில்லை என்று
உடனே ஒரு கேள்வி
இலங்கையில் மட்டுமா நம் இனம்
இல்லை இல்லை
அந்த கொடூரம் எங்கு நடந்தாலும்
வேடிக்கை பார்ப்பதே நம் குணம்
மாற்றம் வேண்டும் நம்மிடம்
மாற வேண்டும் நம் இனம் !!!
---------------------sharmi karthick 20-Jan-2014