ஒரு காதல் கதை
இந்த காட்டினுள் நான்
நுழைந்து விட்டேன்!
அதிர்ஷ்டம் எனக்கிந்த காட்டில்.
சுவடே படாத,சுனைநீர் பருகி
வாசனை வீசும்,மலர்கள் பறித்து
வழிகளெங்கும் என்
பாதம் பதித்து தீராத காட்டின்மேல் முடியாத காதலோடு திரும்பத் திரும்ப அலைகிறேன், மரம்தான் முற்றோ?