விருந்தினன்
வீட்டுக் கதவையும்
எவனோ ஒருவன் தட்டுகிறானென்று எல்லோரும்
பேசிக்கொண்டார்கள்...
யாருக்கும் யாரென்று தெரிந்துகொள்ள விருப்பமில்லை.
காத்திருந்ததில் என் வீட்டுக் கதவை எவனும் தட்டவில்லை.
தட்டுகிறவன்
தயக்கப்படுவானோயென்று
கதவுகளைத் திறந்து வைத்தேன்.
காற்று நுழைந்தது.