மிருகம்
எப்படிக் கவிழ்க்கலாம்?
நண்பனா? நகமென
வளர வளர வெட்டலாம்.
கூடவே இருப்பவனா?
_
குழிதோண்டலே போதும்.
தெரிந்தவனா?
சிரித்தே கொல்லலாம்.
எதிரியா?
_
சொல்லவே வேண்டாம்.
எல்லா வழிகளிலும் கண்விழித்துக் கால்பரப்பித்
தயாராய்க் காத்திருக்கிறது
எல்லா மனிதருக்குள்ளும்
ஏதோ ஒரு மிருகம்....