கேடு
கேடான காய்கறி
விற்கவும் ஆளில்லை
வாங்குவதும் யாருமில்லை!
கேடான தண்ணீர்
புடிக்கவும் ஆளில்லை
புழங்குவதும் யாருமில்லை!
கெட்டுப்போன பொருள்
கேடு தரும் பொருள்
விற்கவும் ஆளில்லை
வாங்குவதும் யாருமில்லை!
தப்பு! தப்பு!
மேலே சொன்னதெல்லாம்
தப்பு!
கேடு தரும் மது
விற்கிறது அரசாங்கம்!
வாங்குவது குடிமக்கள்!!
பார்த்தவுடன் பயந்துபோய்
பழக்கத்தை விட்டுவிட
அரசாங்கத் தரப்பில்
சில பக்தி வரிகள்..
"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" -????