உறவு
அடிபட்டு கிடந்தான் அவன்
படுக்கையில், ஓடோடி
என்ன ஆயிற்று, எப்படி
கொஞ்சம் சூதானமாக
இருந்திருக்கலாமே , எப்படி
இருக்கிறது தற்பொழுது
என்றெல்லாம் கேட்கத்தான்
ஆசைப்பட்டேன், ஆனால்
சுவரில் ஒட்டிய பல்லிபோல்
கூட்டத்தின் ஓரமாய் நின்று
கொண்டுதான் இருந்தேன்
எங்கள் இருவர்க்கும் இடையேயான
உறவை யாரும் அறியாததால்..........,