சுப யோகங்கள்
அந்தி வான பொன்மேகங்கள்
அசைந்து செல்லும் ஊர்கோலங்கள்
அலையும் காற்றின் அமுதகானங்கள்
அழகாய் ஒளிரும் கவிக்கோலங்கள் .....!!!
கண்சிமிட்டி சிரிக்கும் நட்சத்திரங்கள்
கருமுகில் மீட்டும் மழைராகங்கள்
கடலலை பாடும் தாலாட்டுக்கள்
கவினருவி சிந்தும் தேன்சொட்டுக்கள் ....!!!
தவழும் நிலவின் ஒளிக்கீற்றுகள்
தருக்கள் விரிக்கும் நிழற்தோரணங்கள்
தழுவும் தென்றல் சுகதருணங்கள்
தமிழ்கவி பிறக்கும் சுபயோகங்கள் .....!!!