ஊட்டி ஊட்டிய உற்சாகம்

மிக நீண்ட நாளைக்கு பிறகு
ஊட்டி சென்ற போது எழுதியவை........
------------------------------------------------------
மலை மார்புகளை
மூடிமறைத்த மேக சேலை
பூக்களின் தேகத்தில்
உரசி நிற்கும் பனி சோலை
கவிதை வரைய சொல்லி
தென்றல் என்னை கிள்ளியது.
ஊட்டியே ..!!
உன்னை நினைத்தே எழுதுகிறேன்
என்னை மறந்தே போனேன்
மலையன்னையே ! உன்னால்
என் அன்னை பனிக்குடத்தில்
மீண்டும் மிதக்கிறேனோ ?
-----------------------------------------------
பனி போர்வையில்
காதல் போதைக்கு
ஏங்க வைக்கிறாயே?
சில்லென்று சாரல் வீசி
குளிர்யென்று தந்தாயே?
உடல் வெப்பம் கேட்க
மனம் குழப்பம் அடைகிறதே.!
நான் பிரம்மச்சாரி
என நீ அறியவில்லையோ ?
-----------------------------------------------
விரல்கள் நடுங்க
உடல்கள் குளிர
மலர்களை ரசித்தேனே.
மலரின் தேன் பருக
பிறந்த ரசிகவண்டு நான்.
அங்கீகாரம் அற்று
அத்துமீறும் மன்மதன்
நான் அல்லவே ?
------------------------------------------------
என்ன இது ?
என் வாயிலிருந்து
வெண்புகை..
அச்சச்சோ..!
வெண்குழல் பத்தி
விரலிடையில் இல்லையே..?
ஏய் பனியே ..!
ஏன் இந்த சில்மிஷம்.?
---------------------------------------------------
உதகமண்டலத்தில்
இயற்கையாய்
இலக்கியமன்றம் !
மலை மரபு கவிதை
ரோஜா புது கவிதை
ராஜா நான் ரசிககுழந்தை.....!
-----------------------------------------------------
ஏய் ரோஜாவே !
உன்னை தொட்டால்
ரூபாய் நூறு அபாரதமா ?
தொட்டுக்கொண்டு
ரசித்துக்கொள்ளவா?
நூறு என்ன ?
பல ஐநூறு முறை
விதி மீறுவேன்.
உன்னை கிள்ளி
எந்தன் கள்ளியவள்
கூந்தலில் நட்டுவைக்கவா ?
உனக்கு தெரியுமா ?
மலர் உனை கொடுத்தால்
மலரும் அவள் முகம்
மலர்ந்த உன்னை விட
வசீகரமாக ............
புன்னகை பூவாய்
என்னை சொக்கவைப்பாளே..!
அட அட !
அதை ரசித்து கவி எழுத
கம்பனிடம் கொஞ்சம்
கடன்பட வேண்டுமே..!
------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்