செவ்வானம்
செவ்வானம்
==================================ருத்ரா
அகச்சிவப்புக்கிரணம் என்று
விஞ்ஞானம் சொல்கிறது.
அவள்
அகம் சிவந்து
முகம் சிவந்ததை
இவன் கண்டான்.
நாணமோ கோபமோ
இவன் அறியான்.
கடல்விளிம்பு
மலை முகடு
இலைகள் இடையே
சிவந்த இடைவெளிகள்.
செம்பஞ்சு மேகங்கள்
பஞ்சு மிட்டாய் சுருட்டி
அவன் கையில் கொடுத்தது.
வானத்திலும் காதல் இனிப்பு.
மொட்டைச்சுவர்கள்
எனும் கன்னத்தில் கூட
நாணச்சிவப்பே.
எங்கும் சிவப்பு.சிவப்பு.
யூத்துக்கு லிப்ஸிடிக் சிவப்பு.
பெரிசுகளுக்கு மட்டுமா
வேண்டும்
இந்த விடியல் சிவப்பு?