நிழல் நிஜம்
நிஜம் தொலைத்து நிழல் தேடும் மானுடா
எப்போது உணர்வாயோ
நிழல் வேறு நிஜம் வேறென்று..!!!
பணம் தேடி அலையும் மானுடா நீ தேடுவது
ஒளியின் நிழலை ஒளியை அல்ல ...!!!
அன்பென்ற ஒளியே நிஜம் பணமென்ற
ஒன்றே நிழல் ...!!!
நிழல் தேடி அலைந்து ஒளியை
தொலைத்து விடாதே ....!!!
உன் வாழ்வை இழந்து விடாதே ...!!!
-அன்புடன் பார்தீ