கொடிமரத்து பூவாய்

இங்கே
ஒரு ஏழையின் எண்ணங்கள்
கொடிமரத்தில் உதிரும் பூவாய்
உதிர்ந்து கொண்டுள்ளது - ஆம்
சுதந்திரம் அடைந்த நாட்களை
கணக்கிட்டவர்கள்
ஏழையின் மனதை
உணர மறந்து விட்டது

விழாக்காலங்களில்
பணம் படைத்தவன்
மதிக்கப்படுகிறான் - பாமரனோ
தள்ளி வைக்கப்படுகிறான்

விடுதலைக்காக போராடி
இன்னும் வாழ்வில் போராடும்
ஏழைகள் - இன்று
தீண்ட தகாதவர்கள்!?

இந்திய தாயின் இமயத்தில்
இந்த மூவர்ண கொடி பறக்க
செவ்வண்ண குருதி இழந்த - ஏழை
கொடியேற்ற தகுதியற்றவன் இன்று

நாட்டிற்காக
உடலையும் உயிரையும் - கொடுத்த
ஏழையின் கைகளில் - இக்
கொடி ஒருமுறையேனும்
ஏற்றப்படவேண்டும்
இச்சுதந்திர இந்தியாவில்

இங்கே
ஒரு ஏழையின் எண்ணங்கள்
கொடி மரத்தில் - உதிரும்
பூவாய்
மலர்ந்து கிடக்கின்றது

எழுதியவர் : Amirthaa (22-Jan-14, 2:37 pm)
சேர்த்தது : அமிர்தா
பார்வை : 75

மேலே