கண்ணீர்

***கண்ணீர்***
வஞ்சியின் கண்ணீர் !!!= நல்
வரண் கிட்டட்டும் என்று...
_
வயல்களின் கண்ணீர் !!! =
வருணபகவான் கொட்டட்டும் என்று ...
_
வறியவன் கண்ணீர் !!!=
வயிறு நிறையட்டும் என்று ...
_
வலியவன் கண்ணீர் !!!=
வளமை குன்றாது நிலைக்கட்டும் என்று ...
_
வாலிபனின் கண்ணீர் !!!=
வருங்காலம் எப்படியோ என்று ...
_
வயோதிகரின் கண்ணீர் !!!=
இனி வாழ்வு புகழோடு முடியட்டும் என்று ...
_
காணல்நீர் !!!= கண்டு
காயும் விவசாயின் கண்ணில் நீர் பெருகுதே ...
_
கருணை கொண்டு
மேகம் மழைநீர்!!!= தந்தால்
இவ்வையம் வளமாகுமே .

எழுதியவர் : Akramshaaa (22-Jan-14, 9:23 pm)
பார்வை : 95

மேலே