கருவிலிரிந்து எழுந்த கடவுள்

கருவிலிரிந்து எழுந்த கடவுள்
---------------------------------------------

அன்னை தேவகி சுமந்த கருவில்

உயிராய் வந்தமர்ந்தான்

கண்ணன் எனும் உம்பர் கோமான்


வேள்வியில் பிரமன் தந்த

அமுதம் உண்டு

அயோத்தியில் அன்று கருவுற்றாள்

தயரதன் துணைவி கோசலை

அதன்பின்னே ஈன்றெடுத்தாள்

இராமனெனும் உத்தம ஆண்மகவை

இல்லை இறைவனை



பாலகன் பிரகலாதன் துயர் தீர

தூனைப்பிளந்து வெளிவந்தான்

நாதன் நரசிங்கமாய்

துணும் கருவுற்றதுபொல்-அன்று

தூணும் அங்கு தாயாயிற்று !



அண்டலோக அதிபதிக்கு

எல்லை என்பதேடும் இல்லை

எல்லையிலா அருளாளன்

ஆரா அமுதனவன்

மீனாய் ஆமையாய் பன்றியாய்

எழில் நரசிங்கமாய்

இராமனாய் கிருட்டினனாய்

அவதாரங்கள் பலவெடுத்தான்

இவையெல்லாம் இறைவன்

கருவிலிரிந்து வெளிவந்த

கதைகள் சொல்லும்



"அணுவிற்கணுவாய்

அப்பாலுக் அப்பாலாய் "

அவன் உயிருக்கெலாம்

உயிராய் எங்கும்

எதிலும் இருப்பான்


தாயின் கருவிலும் தோன்றுவான்

மனிதனாய் இறையை காட்ட

இறைவன் மனிதனாய் இருக்கலாம்

எழுதியவர் : தமிழ்பித்தன் (23-Jan-14, 7:00 am)
பார்வை : 88

மேலே