இனிய பேத்திக்கு இனிப்பான பிறந்த நாள் 25012014 - II

என் இனிய பேத்திக்கு
இனிப்பான பிறந்த நாள்

அழகிய புன்னகை
ஆழமான அன்பு
இனிக்கும் வாழ்க்கை
ஈடில்லா நட்பு

உண்மை நண்பர்கள்
ஊனில் உணர்வில்
என்றும் இன்பங்கள்
ஏங்காத செல்வங்கள்
ஐக்கியம் உன்னிடம்

ஒப்பில்லா பேத்தியே
ஓமென்ற மந்திரம்போல்
ஒளஷடம் பெற்று
இ ஃதே உனக்கு (ஆயுத எழுத்து )

என்னு டைய
இனிதான
பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள் !!!

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (23-Jan-14, 8:37 am)
பார்வை : 4449

மேலே