எட்டாவது ஜென்மம்
நான் இப்போது
எட்டாவது ஜென்மத்தில்
ஏழாம் அறிவுடன்
ஆறாம் அறிவோடு
மரணித்த என்
ஏழவாது ஜென்மத்தை
நினைத்து பார்க்கிறேன்
மாபெரும் பிறவியாம்
மனித பிறவி.
ஏழாம் பிறவியாக
மனிதனாக பிறந்திருந்தேன்
மனிதர்களுடன் வாழவில்லை.
ஆம் மனிதர்கள்
இப்படித்தான்...!
புனிதம்
பேசியவர்கள்
மனிதம்
விலை பேசினார்கள்
சுயநல
விலை கொடுத்து
பொதுநல
அரிதாரம் வாங்குகிறார்கள்.
சாதிக்கும் பிறவியெடுத்தும்
சாதி சாக்கடையில்
நீந்தி கொண்டிந்த
பன்றிபிறவிகளாக சிலர்..!
மதநெறியின் கழுத்தை
வெறிப்பிடித்து குதறிய
நாய்பிறவிகளாக. சிலர்....!
பணம்! பணம் என்று
இனம் மறந்து
குள்ளநரிகளாக பலர்.
மனிதர்கள்
மனிதர்களாக இல்லையோ?
மனிதப்பிறவி
ஈனப்பிறவியோ?
மனிதப்புத்தி
இப்படித்தானோ ?
மெளன வினாக்கள்...!
விடை பெற்றேன்....!
ஏழாவது ஜென்மத்திலிருந்து
செயற்கையாய்
இயற்கை ஏய்தினேன்.
இப்போது
எட்டாவது ஜென்மத்தில்
யாருக்கும் புலப்படாத
எவருக்கும் கட்டுப்படாத
எதற்கும் அஞ்சாத
நான் நானாக..!