எத்தனை பெயர்கள் எனக்கு
என் பெற்றோர்களுக்கு மகன் ஆனேன் .
என் தம்பி , தங்கைக்கு அண்ணன் ஆனேன் .
என் குடும்பத்திற்கு தலைவன் ஆனேன் .
என் மனைவிக்கு கணவன் ஆனேன் .
என் குழந்தைகளுக்கு தகப்பன் ஆனேன் .
என் பேரன் பேத்திகளுக்கு தாத்தா ஆனேன்
நான் இப்பொழுது கிழவன் ஆனேன் .
இன்னும் சற்று காலத்தில் மரணம் ஆவேன் .
இது தான் வாழ்க்கை .