அன்பு ஒன்றே பக்தி மார்க்கம்

பிடிக்குள் அடங்கும்
பிரகாசிக்கும் சூரியன் - உன்
பிரியமே போதும்...
பிறகு வேறென்ன வேண்டும்...!!

நினைத்துப் பாரு இந்
நிலமே தொட்டில்
நீ கேட்கும் ஓசைகள்
நிம்மதித் தாலாட்டு....!!

எதிரே வருவது
எதிரி அல்ல நண்பா ! உன்னை
எப்படி இருக்கிறாய்
என்ற - தாலாட்டின் ஒரு வரி...!!

மென்மையாய் ரசித்திடு - மனிதற்கு
மேல் இல்லை எதுவும் மண்ணில்...
மேன்மையை பழகிடு - அன்பை விட
மேல் இல்லை எதுவும் பக்தியில்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Jan-14, 8:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 131

மேலே