தமிழன் தொலைத்த முகவரி தேடி - பூவிதழ்

நிலவே !

தினமும் தெரு உலா - தமிழன்
தொலைத்த முகவரி தேடியா ?

தேடித்திரிந்து தேய்கிறாய் - ஈழம்
இழந்த உறவுகளையா ?

தேய்ந்து ஓய்ந்து மறைந்தும் போகிறாய் -தனி
ஈழம் போல!

காரிருளாய் சிலநாள் - கருப்புக்கொடி போராட்டமா ?
துக்கம் மறந்த மனங்களாய் - தமிழனை போல !

மீண்டும் வளர்ந்து ஒளிவீசி உலா வருகிறாய்
மண்ணில் இன்னும் மனிதம் தேடியா ?

நீதி மறுக்கப்பட்ட தமிழனுக்கு நீ நடத்தும்
தனிநபர் ஊர்வலமா ?

தமிழன் முகவரி தன்னலமாய் போனது

தமிழன் கரம்கொடுப்பான் என்ற கனவோடு மண்ணோடு புதைந்த சாந்தியடைய ஆத்மாக்களை தேடி
நானும் உன்னோடு சேர்கிறேன்
தமிழன் முகவரி தேடி !

எழுதியவர் : பூவிதழ் (24-Jan-14, 11:23 am)
பார்வை : 439

மேலே