பூந்தோட்டம்

வாசம் வீசாத
வைரப் பூக்கள் !!

மனம் நெகிழ்ந்த
மரகதப் பூக்கள் !!

பாசம் மாறாத
பன்னீர்ப் பூக்கள் !!

நெஞ்சில் உறைந்த
நெருஞ்சிப் பூக்கள் !!

தரம் நிறைந்த
உறவுப் பூக்கள் !!

நான் பெற்ற
நட்புப் பூக்கள் !!

மொத்தத்தில் கல்லூரி ஒரு
பூந்தோட்டம் தான் !!

எழுதியவர் : பெருமாள் (24-Jan-14, 9:16 am)
Tanglish : poonthottam
பார்வை : 324

மேலே