நம்பிக்கையில்லாதவர்களுக்கு உதாரணமாய்

கருமமே கண்ணாய் கல்வி
வளர்ச்சிக்கு அரும்பாடு படும்
ஆற்றல்மிக்க திறன்மிக்க பலப்பல
அரசுப்பள்ளி ஆசிரியைகளின் புலம்பல் (...)

அறுபது மைலுக் கப்பால்
அழகான சூழலுடன் கூடிய
ஆங்கிலப் பள்ளி ஆண்டிற்கு
அறுபதைத் தாண்டும் கீழ்நிலை
வகுப்பின் கட்டணமே( ...)

அறுபதென்ன ஈரறபதாகட்டுமே -என்
பிள்ளை மருத்துவம் பயிலவேண்டும்
அப்பள்ளி பயிற்சியே அதற்கான
தகுதிக் கவனை உயர்த்தும்
பணிமாற்றம் கிடைக்குமோ ?

விடுதி சரிவருமோ ?அய்யோ
அங்கிடும் உணவு பிள்ளையின்
உடல்நிலையை கெடுத்து விடுமோ ?
வேண்டாம் மேனிலை இரண்டாம்

ஆண்டு முடிப்பதற்குள் கோடி
ஆனாலும் ஆகட்டும் குடிபெயர்வோம்
பள்ளிக்கருகே வாடகை வீட்டிற்கு ....

எழுதியவர் : பிரியாராம் (24-Jan-14, 2:51 pm)
பார்வை : 167

மேலே