காட்டேரியின் காபரே ஆட்டம் ஒப்பாரி

காட்டேரியின் காபரே ஆட்டம்...
===============================
(ஒப்பாரி பாடல்)
என்னான்னு சொல்லுறது
நா(ன்) எதுன்னு சொல்லுறது???
ஊரு மேல போற மாரியாத்தா
இப்ப காட்டேரியா மாறிபுட்டா... மாறிபுட்டா!!!
வாசப் பக்கம் வராம - திருடியாட்டம்
அவ கொல்லப் பக்கம் வந்துபுட்டா
அய்யயோ அவ ஆடுகிறா ஆடுகிறா
இன்னுமவ அடங்கவில்ல... அடங்கவில்ல!!!.
ஆஆங்ங்.... ஹக்..ஹக்.ஹக்.ஹக்.....
எதப் பத்தி எழுதினாலும் அத்தனையும்
தனதுன்னு சொல்லிக்கறா.... சொல்லிக்கறா...
என்னத்த தான் நான் எழுதுறது.. எழுதுறது...??
எனகொன்னும் புரியலையே... புரியலையே!!!
கண்டத தின்னதால செரிமானம் இல்லாம
கவிதையில கழிசலத்தான் விட்டுப் போறா
எல்லார்க்கும் கழிசடன்னு தெரிஞ்ச பின்னும்
ஊர்ஜிதமா சொல்லுறாளே... சொல்லுறாளே!!!
ஆஆங்ங்.... ஹக்..ஹக்.ஹக்.ஹக்.....
என்னென்னமோ பேரு வெச்சி
எத்தனையோ வேசங்கட்டி.. வேசங்கட்டி
பாடா படுத்துறாளே பாவி சண்டாளி மக
யார் எதித்து கேட்டாலும் எம்பி எம்பி குதிக்கிறாளே!!!!
அய்யா மாரே.. அண்ணன் மாரே....
இந்த அநியாயத்தக் கேளுங்கையா
வாய்க்கு வந்தபடி பேசுறாளே...பேசுறாளே
பேய்க்கு பொறந்தவளா.. நாயா கொரைக்கிறாளே
ஆஆங்ங்.... ஹக்..ஹக்.ஹக்.ஹக்.....
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
துப்ப எடம் கெடக்காமத்தான்
எடம் மாறி வந்துட்டாளே
துப்பு கெட்டவதான் துப்பிவிட்டு போறாளே
தட்டி கேட்க ஆளில்லையா??.. தட்டி கேட்க ஆளில்லையா??..
அவள தட்டி கேட்டாலுந்தான்
எட்டு குட்டி போட்டுடுறா
எட்டு பேருலதா(ன் ) எட்டு "ஐடியோட"
புத்து நோய் கிருமி போல பரவிட்டாளே... பரவிட்டாளே...
ஆஆங்ங்.... ஹக்..ஹக்.ஹக்.ஹக்.....
எங்கெங்கோ உள்ள தூசியெல்லாம்
ஒட்டு மொத்த ஒட்டடையா
வந்து நின்னா நா(ன்) என்ன செய்ய??
கெட்ட வாட வீசுதல்லோ.. வீசுதல்லோ..வீசுதல்லோ..
கெட்ட.. கெட்ட வாட ஒட்டடைய
வெளக்குமாரில் தள்ளிவிட்டும் போகலையே
ஒட்டடையே ஒடம்புக்காரி ஆனதிலே
சுத்தஞ் செய்ய முடியலையே.. முடியலையே...முடியலையே...
ஆஆங்ங்.... ஹக்..ஹக்.ஹக்.ஹக்.....
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
நட்ட நடு ராவினிலே வந்தாளே ராக்காசி
குட்டய கொழப்புறாளே என்னென்னமோ சொல்லிக்கிட்டு
ஒன்னாத்தான் கூடுங்கையா.. கூடுங்கையா.. கூடுங்கையா..
ஓட்டவேணும் காட்டேரிய... காட்டேரிய.. காட்டேரிய...
சிங்கார தளத்தத்தான் செல்லுப்பூச்சி போல
அரிக்கிறாளே..அரிக்கிறாளே.. சீரழிக்கிறாளே
எதாச்சும் பண்ணுங்கையா தள நிர்வாகத்தாரே
தளத்தத்தான் காக்க வேணும்.. காக்க வேணும்..காக்க வேணும்...
ஆஆங்ங்.... ஹக்..ஹக்.ஹக்.ஹக்.....