உளி உன் கைகளில்

நல்லது
எதுவென்று தேடு
நல்லதை
மட்டுமே நாடு
நன்றிகள்
பலநூறு கூறு
நற்பண்புகள்
அதை நீ பாராட்டு..!!
எல்லை
இல்லாதது மனம்
அதில்
ஏற்ற இறக்கங்கள் ஏராளம்
ஏற்றதைப்
போற்றப் பழகு
எண்ணத்தின்
தூசுகளைத் தூற்று..!!
விளக்குபோல்
அளவாக எறிந்திடு
விடியல்போல்
சுகமாக வெகுண்டெழு
உறக்கத்தை
ஒளிகொண்டு எழுப்பிடு
சோம்பலை
சூடேற்றி முறித்திடு..!!
எரிகின்றவற்றுக்கு
எரிபொருள் தருவதை நிறுத்திடு
பொழிகின்றவற்றை
பொறுமை கொண்டு அணையிடு
எழுகின்றவற்றுக்கு
படிகள் அமைத்து கொடுத்திடு
நிறையென்றவற்றை
நிலையாய் நீயும் காத்திடு..!!
சிந்தனையை
சீர் தூக்கி வைத்திடு
சிற்பியாகி
உன்னையே நீ செதுக்கிடு
வேண்டா
நினைவுகளை அகற்றிடு
சிலையாகி
அழகாகும் உன் உள்ளமும்..!!