முரண்படா முரண்கள்

சொல்லி விடு சொல்லி விடு
சொல்லிவிட்டால் கள்ளம் இல்லே!
சொன்னால் கெடும் நல்லதானால்
சொல்ல வேண்டாம் தவறு இல்லே!

பொய்யும் கூட நன்மையானால்
மெய் ஒளித்தால் தப்பு இல்லே!
மெய் உரைத்தால் கெடும் என்றால்
பொய் மறைக்கத் தேவை இல்லே!

வறுமை விட்டு ஒழியுமானால்
கருப்பு மீட்டால் களவு இல்லே!
சிறுமை கெட்டு அழியுமானால்
சிறைப் பட்டாலும் பழியும் இல்லே!

சத்திய மும் செய்திடலாம்.
சமரசம் வாழப் பாவம் இல்லே!
பத்திய மும் முறித்திடலாம்.
சத்தியம் காக்க மோசம் இல்லே!

நூறுயிர்கள் வாழுமானால்
ஓருயிர் இழப்பு இழப்பும் இல்லே!
உரிமை அதில் உய்யுமானால்
பெருமை செத்தால் குற்றம் இல்லே!

கொலைக்கு கொலை தீர்வானால்
கொண்டாட மனிதம் இல்லே!
விலையில்லா உயிர் பறிக்கும்
வேட்டைக்கிங்கு உரிமை இல்லே!

யுத்தம் கண்டு மாண்டாலும்
போற்றலாம் தோல்வி இல்லே!
இறுதி வரையும் போராடி
இழந்த கற்பும் களங்கம் இல்லலே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (24-Jan-14, 10:18 am)
பார்வை : 144

மேலே