ஆ ட் டோ க் கா ர ன்
ஆடோக்காரர் அன்பானவர்தான் ,
ஆபத்திலிருந்தும் காப்பவர் தாம்.
விலாசம் அறிந்த விஞ்ஞானி,
விபரம் சொல்லும் மெய் ஞானி ,
வளைந்து நெளிந்து சென்றிடுவார்
வலி இன்றி இடத்தில சேர்த்திடுவார் .
உரிமைகேட்டும் போரிடுவார்,
உழைத்துத்தான் சோறிடுவார்.
தன்னலமறியா உழைப்பாளி,
தாயன்பை பெரும் முதலாளி.
மூச்சுக் காற்றில் உயிரிருக்கும்,
மூன்று சக்கரத்தில் வாழ்விருக்கும்.
பிரசவத்திற்கு இலவசமாய் ஓட்டிடுவார்
பிரியமுடன் எப்பணியும் செய்திடுவார்.
நம்பினால் தெய்வமாய் மதித்திடுவார்,
நட்பினை உயிராய்க் கருதிடுவார்.
ஏய்க்கும் பழக்கம் இவரிடம் இல்லை,
எளிமைதான் இவர்களின் எல்லை.
வளர்ந்திட வேண்டும் இவர் தொழிலின் அம்சம்,
வளர்ந்திட வேண்டும் இவர்தம் வம்சம்.
வகுத்திடவேண்டும் இவர்தம் வாழ்க்கை,
வழிபடவேண்டும் இவர்களின் உழைப்பை.

