55 நம்மைக் கேட்கவில்லை

சொந்தக் கவிதை - 55
நம்மைக் கேட்கவில்லை

நம்மைக் கேட்கவில்லை இருந்தாலும்
நம் இதயம் ஓடிக் கொண்டேதானிருக்கிறது
நம் மூக்கு சுவாசித்துக் கொண்டேதானிருக்கிறது
நம் காது கேட்டுக் கொண்டேதானிருக்கிறது
நம் கண்கள் பார்த்துக் கொண்டேதானிருக்கிறது
நம் மூளை இயங்கிக் கொண்டேதானிருக்கிறது
நம் வயிறு ஜீரணித்துக் கொண்டேதானிருக்கிறது
நம் முக்கிய உறுப்புகள் எவையும்
நம்மைக்கேட்டு இயங்குவதில்லை இருந்தாலும்
நம்உடம்பின் மொத்த நலத்திற்காக இயங்குகிறது
நாம் மட்டும் நம்வாழ்க்கையின் முக்கிய
நபர்கள் நம்மைக் கேட்டுத்தான் நடக்கவேண்டும்
என எதிர்பார்ப்பதில் என்னநியாயம் அவர்களும்
முக்கிய முடிவுகள் தனித்தே எடுத்தாலும்
குடும்பத்தின் மொத்த நலத்துக்காக எடுத்திடல் நன்று

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (25-Jan-14, 9:29 am)
பார்வை : 65

மேலே