சோகமும் சுகம்தான்
என் சோகம்தான்
உனக்கு சுகம் என்றால்...
என் தோல்விதான்
உனது பதக்கம் ஆகும் என்றால்...
என் கண்ணீர்தான்
உனது தாகத்தைத் தணிக்கும் என்றால்...
என் இதயம் நின்றால்தான்
உன் வாழ்க்கைப் பயணம் துவங்கும் என்றால்..
இதோ
என் மூச்சை நிறுத்தித் தென்றலாக்கி...
உன் வாழ்க்கைத் தேரை அதில் படகாக்கி..
உன் புன்னகையில் வழி தேடி
விண்ணுலகம் சென்று வாழ்த்தி வாழ்ந்திருப்பேன்.