கடிகாரம்

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு
செல்கிறான்.

அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய
கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான்.

இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன ?

எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.

இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??

எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?

எமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன....!

எழுதியவர் : முக நூல் (25-Jan-14, 5:09 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 115

மேலே