கடல் பறவை

கடல் நீரை
தேடி செல்கிறது ஒரு
விரைந்து
செல்லும்
கடல் பறவை..
தாகத்தை தணிக்க
தண்ணீரை
தேடி சமுத்திரத்தையும்
சுற்றி வருகிறதே
இதன் அறியாமை
நிறைந்த
என்னத்தை
என்னவென்பது...!
நீரில் கரைந்த
எழுத்து
நிலை பெறுவதும்
இல்லையே..!
கடலில்
கலந்த நீரும்
திரும்பப்போவதும்
இல்லையே..!
சுற்றி வருகிறேன்
சுற்றமும்
பார்க்கிறேன்
ஒன்றுமே
தென்படவில்லை
விரைந்து
செல்லும் எனது
சக்தியும் குறைத்து
போனது நிலை
தடுமாறி
என் வாழ்கையும்
முடிந்து போனது
இனி சொல்வதர்ற்கு
ஒன்றும்
இல்லை
இதை புரிந்து
கொள்ளவும் யாரும்
இல்லை..!