வெவ்வேறு

நாமிருவரும் ஒன்றல்ல என,
என் மூலம்தான் தெரிந்திருக்கிறது,
உனக்கு !
அதுவரையில் சந்தோசம்,
ஒரு பதில் கிடைத்தாயிற்று,
உனக்கு !
நிஜத்தில்,
அதன் தாத்பரியம் தெரியாது !
எப்படி என்றும் புரியாது !
உடல்தாண்டி மனதுக்கும் உயிருக்கும்,
நீண்ட நெடிய தொடர்புண்டு !
அது நிரந்தரமாய் நீங்கிப்போக,
ஒரு மரணம்தான் தேவை !
என்பதனை உன்னிடம்தான்,
உணர்ந்துகொண்டேன் நான் !
அதுதானோ என்னவோ?
உன்னை சேர்ந்திருக்கவும்,
உன் நினைவை சூழ்ந்திருக்கவும்,
கற்றுக்கொண்டேன் மீண்டும் மீண்டும்,
உன்னிடத்திலேயே உன் ஒருத்தியிடத்திலேயே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (25-Jan-14, 9:50 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 62

மேலே