எங்கே என் தேசம்

வல்லரசாகும் கனவுகள்
வல்லம் வரும் வேலையில்
அடுக்கடுக்காய் அம்பலமாகும்
ஊழல்கள்......
எதிரிகள் யாரென்று
எட்டிபார்க்க அவகாசமில்லாமல்
துரோகத்தின் தூறல்கள்
கண்ணை மறைகின்றன.....
ஜான் ஏறினால் முலம் வலுக்கும்
விலைவாசியில் கூட நாணல்
கையிற்றை கொண்டே
வானம் தொடுவது சுலபம் என்று
ஆதாயம் தேடும் கூட்டமும்
பந்தி எப்போது துவங்கும்
தொந்தி எப்போது நிறையும்
என்று காத்திருக்கும் வேலை இல்ல பட்டதாரிகளும்
ஐந்து வயதில் பூட்டிய அரைஞான் கையிற்றை ஐப்ம்பது வயதில் இறுக்கி கட்டசொல்லும்
மக்கள் நலத்திட்டங்களும்
இதை உணர்ந்தும் இன்னும் வீரியம்
பெறாத மக்களும்
இதற்குள் புதைந்த என் தேசமும்,
என்று மீழுமோ???????????????

எழுதியவர் : செந்தில்குமார் ப (25-Jan-14, 11:17 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : engae en dhesam
பார்வை : 201

மேலே