+என் அன்புள்ள படைப்பாளி+
தொந்தி என்பது உனக்கு
கொஞ்சம் அதிகமாய் இருக்கு
தின்பண்டம் கொஞ்சம் குறைப்பாய்
ஊருக்கும் பிரித்துக் கொடுப்பாய்
என் அன்புள்ள காசாளி
சுத்தம் என்பது உனக்கு
தேவைக்கும் குறைவாய் இருக்கு
சுற்றுப்புறம் சுத்தமாய் வைப்பாய்
மனசுக்குள் பன்னீர் தெளிப்பாய்
என் அன்புள்ள சீக்காளி
மூளை என்பது உனக்கு
பலகிலோ கணக்காய் இருக்கு
நல்லதை உரமாய் கொடுப்பாய்
கல்லதை குழியில் புதைப்பாய்
என் அன்புள்ள அறிவாளி
கவிதை என்பது உனக்கு
ஒவ்வொரு அணுவிலும் இருக்கு
நலமுடன் கவிதை கொடுப்பாய்
வளமுடன் தமிழை வளர்ப்பாய்
என் அன்புள்ள படைப்பாளி