நான் ஒரு முட்டாளுங்க

பச்சை தமிழன்
மர தமிழன்
என்று கூறி கொண்டு
தமிழில் பேசினாலே
அபதாரம் விதிக்கும்
M N C நிறுவனத்தில்
பணியில் இருப்பதை
நினைக்கும் பொழுதும்

தமிழை வளர்ப்பதாய்
தம்பட்டம் அடிக்கும்
அரசியல் தலைவர்களின்
பிள்ளைகள் எல்லாம்
CBSE பள்ளிகளில்
என நினைக்கும் பொழுதும்

வெள்ளையனை வெளியேற்றியதை
சுதந்திர தினமாய் கொண்டாடும்
என் தாய்நாட்டில்
அந்நிய நிறுவனமே அதிகம்
என நினைக்கும் பொழுதும்

வயிற்று பிழைப்புக்காய்
வணிகம் செய்யும்
சில்லறை வணிகத்தை கூட
அந்நியனுக்கு அடகு வைத்த
அவலத்தை
நினைக்கும் பொழுதும்

கண்டாங்கியையும் காஞ்சிபட்டாடயையும்
தாவணியையும் தவிக்க விட்டு
நாகரிகம் என்ற பெயரில்
அநாகரிகமாய் ஆடையில்
திரியும் எம் குல பெண்களின்
மேலைநாட்டு மோகத்தை
நினைக்கும் பொழுதும்

சத்தான உணவுகளை
சாகடித்துவிட்டு
பீசா பர்க்கர் என்று
கண்டதையும் தின்று
அதையும் பெருமையாய் சொல்லும்
சில பந்தா இளசுகளை
நினைக்கும் பொழுதும்

அலைபேசியில் அழிந்து
குறுந்தகவலில் குலைந்து
முகநூலில் மூச்சி திணறி
மின்னஞ்சலில் நசுங்கி
இணையதளத்தில் இறந்து
அன்றாடம் செத்து செத்து பிழைக்கும்
நம் கலாச்சாரத்தை
நினைக்கும் பொழுதும்

தமிழக மீனவர்கள்
தாக்கபடுகையிலும்
கொல்ல படுகையிலும்
கைதுசெய்ய படுகையிலும்
கைகட்டி வேடிக்கை பார்க்கும்
என தேச தலைவர்களையும்

காணாமல் போன
இந்திய கடற்படையையும்
நினைக்கும் பொழுதும்

ஆயிரம் தீங்கு செய்த பொழுதும்
தேர்தல் நேரத்தில்
அற்ப பணத்திற்கு
வாக்கை விற்கும்
எம் மக்களை நினைக்கும் பொழுதும்

இப்படி என்ன நடந்தாலும்
எனkகென்ன என்று போகும்
மக்களுக்கு முன்னாள்
கவிதையால் புலம்பும்
என்னை நினைக்கும் பொழுதும்

பட்ட படிப்பு படித்திருந்தும்
பச்சையாய் ஒப்பு கொள்கிறேன்
நான் ஒரு முட்டாளுங்க

சத்தியமா நான் ஒரு முட்டாளுங்க

எழுதியவர் : ந.சத்யா (26-Jan-14, 9:19 am)
Tanglish : naan oru muttalunga
பார்வை : 305

மேலே