திரும்பி பார்க்க வைக்கும் நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒவ்வொரு வரிகளும் நீண்டு செல்கிறது
ஒவ்வொருவரையும் நினைக்கும் போது
தொலைந்து விட்டது என்று நினைத்தால்
தொடுவானத்தில் நிக்கிறது காதல்
அறிமுகமானவர்கள் சிலர்
அன்பாக இருக்கும் போது
அருகில் இருந்தவர்களை
சில நேரம் மறக்கிறோம்
அறிமுகமானவர்கள் பலர்
நம்மை வெறுக்கும் போதுதான்
அருகில் இருந்தவர்களின் அன்பு
நம் கண்கள்வழியே கண்ணீராக தோன்றுகின்றனர்
சில நேரம் அழுகிறோம்
சில நேரம் சிரிக்கிறோம்
சில நேரம் நம்மையே கூட மறக்கிறோம்
வாழ்க்கை எங்கு சென்றாலும்
சிலருக்காகவே நாம் திரும்பிபார்க்கிறோம்.....
அது நட்பாகாகவும் ,காதல்க்காகவும் ,
அன்புக்காகவும் மட்டும்தான் இருக்கநேரிடும்..!!!