கொடி முறைக்குது
கொடி முறைக்குது....
====================
கொடி பறந்தது... கொடி பறந்தது...
காந்திஜி நேருஜி உள்ளங்கண்டு
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
2ஜி, 3ஜி போன்ற பல ஊழல் கண்டு!!!!
கொடி பறந்தது... கொடி பறந்தது...
இரக்கமுள்ள பண் பாளர் கண்டு
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
குண்டர்கள் தண்டர்கள் ஆட்சி கண்டு!!!!
கொடி பறந்தது... கொடி பறந்தது...
குடியுரிமை பெற்ற நன்னாளினிலே
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
ஏற்றும் கரம் இன்று சுத்தமில்லே!!!!
கொடி பறந்தது... கொடி பறந்தது...
நாட்டு மக்களின் ஒற்றுமை கண்டு
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
மத இன தீவிர வாதம் கண்டு!!!!
கொடி பறந்தது... கொடி பறந்தது...
நல்லாட்சி தனை கண்ட தேசத்திலே
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
ஜனநாயகமே கொலையானதிலே !!!!
கொடி பறந்தது... கொடி பறந்தது...
தேசப் பற்று நெஞ்சங்கள் வாழ்ந்ததிலே
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
தேசத் துரோகிகள் வெறியாட்டத்திலே!!!
கொடி பறந்தது... கொடி பறந்தது...
அண்டை நாட்டின் நல்லுறவினிலே
கொடி முறைக்குது... கொடி முறைக்குது
தமிழ் மீனவர் உயிர் பலியாவதிலே !!!
கொடி பறக்கணும் கொடி பறக்கணும்
எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்திடவே
நல்ல நாளும் வரும் காத்திருப்போம்
கொடி இன்பமுடன் என்றும் பறந்திடவே!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைவருக்கும் எனது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
அன்புடன்,
சொ. சாந்தி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!