என் தமிழ்
![](https://eluthu.com/images/loading.gif)
தூய தமிழ் கேட்கவே - செவிகள்
ஏங்குதம்மா!
துயர் மறந்து தமிழ் பாட- மனம்
ஏங்குதம்மா!
தமிழ் மறந்தார் தமிழ் கேட்க
சகிக்கவில்லை அம்மா!
தாய்மொழி மறந்தவர் உடன்சேர - மனம்
கூசுதம்மா!
அந்நிய மொழி அழகென்பார் - நற்பு
வேண்டாம் அம்மா!
ஆசை மொழி பேசிடுவார் வார்த்தை
தேடுதம்மா!
தனித் தமிழை பிழையென்பார்
பிடிக்கவில்லை அம்மா!
தனித் தமிழை பேசிடுவோர் - உறவு
வேண்டுமம்மா!
டாடி மம்மி கற்பிப்பார் - அயல்
பிடிக்கவில்லை அம்மா!
தமிழே வாழ்க்கை என்றிடுவார் - கூட்டு
வேண்டுமம்மா!
சேர்ந்திடுவார் மொழி பேச
தவறில்லை அம்மா!
சேர்ந்திடுவாரும் நம்மொழி கற்க - உதவ
வேண்டுமம்மா!
இலவசமாய் வந்ததனால் - தமிழ்
சிறிதில்லை அம்மா!
ஈன்றெடுத்த தாய் தந்த பாலை
போன்றதம்மா!