வறுமை

வறுமை

ஆலம் விழுதும் அழுகிறது
" வறுமையில் வாடி
நொடியும் அயராமல் உழைத்து
கையில் பணமும் இல்லை....
இனி வியர்வை சிந்த உடலில் சக்தி இல்லை....
பட்டினியை போக்கிக்கொள்ள உணவும் இல்லை....
பட்டினியுடன் படுத்துறங்க ஒரு ஜான் நிலமும் இல்லை....
அழுவதற்கு ஒரு துளி கண்ணீரும் இல்லை....
இதை காணும் இறைவனிடம் இரக்கமும் இல்லையே" என்று
நீ அதன் மீது சாய்ந்து
சிந்திக்கும் நேரங்களில்.....

எழுதியவர் : யுவஸ்ரீ (26-Jan-14, 6:55 pm)
Tanglish : varumai
பார்வை : 242

மேலே