தை மாதமே கேள்
இன்னும் புரியவில்லையா ?
இது காதல் என்று நினைக்கிறாயா ?
பனி மழை பெய்யும் ஊரில் ..
என் கண்ணில் தனியாய் தெரிந்த பனிக்கட்டி..
உன்னுடன் பழக நினைத்த்தேன் பண்புடன்..
பகல் இரவில் யோசித்தேன் அன்புடன் ...
பரிதவிக்கும் மனதில் உனக்காய் பிறந்த அன்பை கொண்டு ..
அணுகினேன் உன்னை அழகாய் அன்று..
அச்சத்துடன் உன்னிடம் கேட்டது அன்பை மட்டும்.
தோழியே உலகில் எளிதில் கிடைக்காத அரிதான குறள் அது மட்டும் ..
உள்ளத்தில் இருப்பதை உன்னிடம் சொல்லிவிட்டேன்...
உணர்ந்து கொள் தோழியே உலகில் மனிதர்கள் வாழ்வது சில வருடங்கள் மட்டும் ...
காணவில்லை என்று கவலை படாதே..
அன்பு மட்டும் கிடைத்து விட்டால் கண்கள் அழகை ரசிக்காதே ...
அழகாய் இருப்பது அவசியமில்லை ...
ஆத்திரத்தில் அன்பு தெரிவதில்லை..
ஆயிரம் விழுதுகள் கொண்டாலும் ஆலமரம் ..
ஆணிவேரை கொண்டுதான் உயிர் வாழ வேண்டும்
ஆயிரம் கைகள் அணைக்க வந்தாலும்
தாயின் அரவணைக்கும் கரங்களையே குழந்தை நாடும் ...
அன்பு கொண்டு கரங்கள் நீட்டுகிறேன் அறிமுகம் கொள்ள
ஆசையோடு கேட்க்கிறேன் உன்னிடம் என் நடப்பை வளர்க்க...