பிள்ளைய பெற்றால் கண்ணீரு
![](https://eluthu.com/images/loading.gif)
பட்டு - பூச்சி ஒன்று
கூடு விட்டு இறங்குது
உயிர் மூச்சு உள்வாங்கி
சத்தம் போட்டு அலறுது
முல்லை மொட்டு நான்கு காலில்
மண் மீது தவழுது
எச்சில் கொண்டு பொம்மைகளை
புண்ணிய பொருள் ஆகுது
விரல் பிடித்த நிழல் என்னை
முந்தி கொண்டு ஓடுது
சில பொருள்கள் வேண்டும் என்று
கொஞ்சி கொஞ்சி கேட்குது
கையில் அதை தந்த பின்னே
சிட்டு போல பறக்குது
கல்விதனை கற்று மெல்ல
என் அறிவை மிஞ்சுது
படித்த பாடம் எனக் குரைத்து
என் அறிவை வளர்க்குது
பட்டம் வாங்கி வேலை தேடி
சொந்த காலில் நிக்குது
தன் துணையை தேர்வு செய்ய
என் கருத்து நாடுது
என் முதுமை போக்கிடவே
அன்பு கரம் நீட்டுது
என் பயணம் முடிந்திடவே
கண்ணீர் துளி சிந்துது
என் பயணம் முடிந்திடவே
கண்ணீர் துளி சிந்துது