எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே

ஒரு கணம் தவறாமல்
காத்திருக்கிறேன்.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
மானுடம் தோன்றிய நாள் முதல்
மங்கையர் பரிபூரணமெய்துவது
உன்னால்தான்....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
காத்திருந்து காத்திருந்து
இன்றொடு ஆண்டு இரண்டாகிறது
உனக்காகதான்.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
பிறர் மழலை பார்க்கும் போது
உன் குரலை கேட்க தவிக்கிறது
என் மனது.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
பிறக்கவில்லை இன்னும் நீ
பிறந்தது உனக்கான பெயர்
இன்னும் என்னைக் காக்கவைக்காதே....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
பிறர் கேட்கும் கேள்விகளால்
பித்தாய் போகிறது நெஞ்சம்
பெறுத்தது போதும்
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
என் கண் கலங்க தாங்கிடா
உன் தந்தை கலங்கிநிற்கிறார் உன்னாலும் என்னாலும்
கலங்கவைக்காதே.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
கடலென கன்ணீர் தருகிறாய்
இதயமெங்கும் இமயம்போல் வலிகள் தருகிறாய்
உன்னை சுமக்கும் சுகத்தை எப்பொழுது தருவாய்.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....
இப்படிக்கு
உன் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும்
உன் அன்பு அம்மா அப்பா.....