காதல் வாழ்ந்து கொண்டே இருக்கிறது

இதோ!
என் இறுதி மூச்சை இழுத்து நிறுத்தி
உனக்கு உயிர் தந்தேன் என்று
முத்தமிடும் தாயின் உள்ளத்தில்;

தடைகள் தாண்டி
அவன் கரம்பிடிக்கும் போது
அவள் கண் சிந்தும் துளியில்;

பேசிய வார்த்தை எல்லாம்
அவள் தான் என தெரிந்தும்,
பேசும் வார்த்தை கூட
அவள் தான் என உணர்ந்தும்,
மீண்டும் பேச துடிக்கும்
ஆணின் உள்ளத்தில்;

காதல் வாழ்ந்து கொண்டே இருக்கிறது;

எழுதியவர் : priyan (28-Jan-14, 1:13 pm)
சேர்த்தது : கவிப்பிரியன்
பார்வை : 81

மேலே