+நீரால் மூழ்கியது விழியோரம்+

திங்களுக்கு தங்கையவள்
பெண்கள் மயங்கும் அங்கையவள்
அன்பால் மூழ்கடிக்கும் கங்கையவள்
எனை தவிக்கவைத்த மங்கையவள்

தேடி அலைந்திட்டேன் நதியோரம்
நீரால் மூழ்கியது விழியோரம்
பெயரை உச்சரித்தது இதழோரம்
எங்கும் காணவில்லை வெகுதூரம்

விட்டுச்சென்றாள் அவள் நினைவை
வெட்டிச்சென்றாள் என் கனவை
திருப்பிபோட்டாள் என் வாழ்வை
திரும்பிவந்தாள் மிக மகிழ்வே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Jan-14, 7:10 am)
பார்வை : 272

மேலே