நூலகமும் வீடும்
நூலகமும் வீடும்
நூலகத்தில் நெடுநேரம்
நண்பர்களுடன் அரட்டையும்
பேச்சுமாக மகிழ்ச்சியோடு---
வீட்டுக்கு வந்தேன்---படிப்பில்
ஆழ்ந்து விட்டேன்---
"என்னங்க--! குழந்தையோடு
கொஞ்ச நேரம் விளையாடக்
கூடாதா?" மனைவியின்
கெஞ்சல் கேள்வி---
பாவம் குழந்தை--அங்கே
ஓயாத அழுகையோடு---