காதலோ அவள் மேலே
மொட்டை மாடி
வட்ட நிலா,
பச்சிளம் குழந்தையின்
பல்லில்லா பால் சிரிப்பு,
மார்கழி மாதத்து
மங்கையரின் மாக்கோலம்,
அலுவலக களைப்பில்
அன்னைமடி அரை தூக்கம்,
புன்னை மரத்து கிளையிடையே
குயிலெடுக்கும் புதுப்பாட்டு
துயில் எழும்பும் பூவுக்குள்ளே
தேன் திருடும் தேனீ என
இவையொன்றில் ஏதுமொன்றை
எழுத நினைத்து காகிதம் எடுத்தால்
படுபாவி பந்துமுனை பேனா
அவளை மட்டும் தான்
எழுதி தொலைக்கிறது,
எனைப்போலே என் பேனா
விழுந்ததுவோ அவள்மேலே
காதலெனும் பெயராலே !!!!