அன்பே

வித்தை பெண்ணே
என் உயிர் கண்ணே
அட சிட்டி பெண்ணே
என் சிங்காரா கண்ணே

கிராமத்து பெண்ணே என் கண்ணே
மாமா மகள் எந்தன் தங்க சிலையே
பணிவான அடக்கம் ,உன் குணத்தில்
பணம் எதற்கு சொல்லடி கண்ணே

சொல்லில் நீயும் சொல்லாமல்
கண் வித்தை பலகாட்டுகிறாய்
புரிந்த மாமன் நானோ தினமும்
உன்னை எண்ணி வாழ்கிறேனடி

அலைபேசியில் உன் குரல் கேட்டிட
நாலடி சுவருக்குள் அலைந்து நானும்
என் உயிர் தங்கமே தவிக்கிறேனடி
காத்திருக்கும் நாட்கள் நீண்டிடாமல்

அன்பானவளே என் உயிர் அக்கா மகளே
உன் அன்பினில் கோபங்களை மறந்திடவே
என் மாமா காலில் விழுந்திடவா சொல்லடி
தங்கம் ஒரே போல என்றும் நிலைப்பதில்லை
என் அக்கா மகள் உன்னை அன்றி வேறென்ன

எழுதியவர் : (29-Jan-14, 3:54 pm)
சேர்த்தது : தமிழ் அழகி.
Tanglish : annpae
பார்வை : 101

மேலே