நீயும் என் தாயே

உன் மடி தஞ்சம் புகும்போது
தாலாட்டி தாலாட்டி
என்னை தூங்க வைத்தாயே!

என் இன்ப தருணங்களை
ஆடி ஆடி
உன்னுடன் பகிர்ந்து கொள்வேனே!

உன்னுடன் இருக்கும் மகிழ்ச்சியில்
உறவாடி உறவாடி
என்னுள் புத்துணர்வு கொண்டேனே!

என் நிந்தைதுதி மறந்து
உயர்ந்தோடி உயர்ந்தோடி
உன்னுடன் சேர்ந்து திளைத்தேனே!

ஏதுமில்லா மங்கை இவளுக்கு
இன்னும் இன்பம்
மனவமைதி தரும் என் ஊஞ்சலே....

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (29-Jan-14, 6:41 pm)
Tanglish : annai
பார்வை : 901

மேலே