அறிந்திருக்கவில்லை

அறிந்திருக்கவில்லை
மலர்கள் அறிந்திருக்கவில்லை – என்னவன்
அவைகளை விட மனம் கவர்பவன் என்று

மின்னல் அறிந்திருக்கவில்லை – என்னவன்
விழிபார்வை அவற்றை விட கோடி பிரகாசம் தரும் என்று

சிங்கம் அறிந்திருக்கவில்லை – என்னவனின்
கம்பீரம் சிங்கத்தையும் மிஞ்சியது என்று

உறவுகள் அறிந்திருக்கவில்லை – என்னவனின்
அருகாமை, நான் சோர்ந்திர்க்கும் சமயங்களில் தரும் வலிமையை

அவனும் அறிந்திருக்கவில்லை –
அவனுக்காக நான் இருப்பேன் என்று

நானும் அறிந்திருக்கவில்லை –
அவன் மனத்தில் நான் தோழி ஆக மட்டுமே இருப்பேன் என்று…
விதி மட்டுமே அறிந்திருந்தது

என் காதல் கனவாக…

எழுதியவர் : Devipriya Hariharan (29-Jan-14, 7:20 pm)
சேர்த்தது : Tamilkuzhali
பார்வை : 201

மேலே