நட்போடு வாழ

நட்போடு வாழ
ஆசைப் பட்டு.....
இன்று நடைப்
பிணமாய்....நாதி
அற்று....அநாதரவாய்....
அந்தரித்து நிற்கிறேன்
தருவோர் ஆதரவு
அனைத்தையும்
இழந்து.....!!

கல்வி கற்றுக்
கொடுக்காத
பல்லாயிரம்
விஷயங்களை
ஒருசில மனிதர்கள்
கற்பித்துப் போனார்கள்.....
முடிந்தால்
வாழ்ந்து பார்
இப்படிதான்
வாழ்க்கை என்று.....!!

வரனுக்கு
வேதனமாம்
என்று சீதனம்
கேட்கவில்லை....
பொன்னும் பொருளும்
கேட்கவில்லை...
பொருள் பண்டம்
கேட்கவில்லை....
கேட்கவில்லை என்பதால்
கேளாமல் விலகி
நிற்கும் வேடிக்கை
மனிதர்களை
வேதனை மனசோடு
வெந்து போகிறேன்.....!!

நாளைய
பொழுது விடியாமல்
போகலாம்.....என்
கண்கள் திறக்காமலே
போகலாம்.... காலம்
போதும் வாழ்ந்த
காலம்
போதும்.....என்று
சொல்லி மடிகிறேன்.....!!

எழுதியவர் : thampu (30-Jan-14, 3:16 am)
Tanglish : ntpodu vaazha
பார்வை : 685

மேலே