புதிர் திருடன்
கைபிடித்தே
கனவுக்குள் வந்தாய்
ஆசைகள் களிப்பூறி
அலை ஓடாத
இரும்பு மனசை
இயல்பெனும்
குழந்தைக் கனிவனால்
உன் வசம் வாசம் அடைத்தாய்
நித்தம் நித்தம் நினைவு தொட்டு
மனக்கற்பு அழித்தாய்.....
நிஜமாய் நீ என்னை
சுண்டு விரல் நுனி கொண்டு கூட
தீண்டாத போதும்
தடுமாறினேனா...
தடம் மாறினேனா...உன்னில் நான்
புரிந்து கொள்ள முடியா
உறவில்.....
பிணைந்து கொள்ளல்
இல்லாத பிரிவுகள்
கானல் நீர் ..நீ என
கவலை கொள்ளுதல்
மட்டும் ஏனடா....???
என் பதிவிரதை தவக் காடுகள்
ஸ்தம்பிக்க வைத்து
தவிக்க செய்யும்
புதிர் திருடனே...!!