பள்ளியை மறவாதே

பாதைகள் பல மாறி போனாலும்
நம் பயணங்கள் தொடங்கிய இடம் இது...

கிளைகள் பல தோன்றி வளர்ந்தாலும்
நம் வாழ்கையின் வேர் இது...

உருவங்கள் பல மாறிப்போனாலும்
நாம் கிடந்தது உருளிய தொட்டில் இது..

கால்கள் பம்பரம் போல சுழன்றாலும்
நாம் நடை பழகிய நடைவண்டி இது..

பல மூலைகளில் பிரிந்து கிடந்தாலும்
சேருவோம் வருடத்தில் ஒரு நாள்..

பணத்தால் நமக்கு நாமே
போட்டுக்கொண்ட சிறைக்கதவை உடைத்து
பறந்திடுவோம் பழமை நினைவுகளில்...

எழுதியவர் : அசோக்குமார் (31-Jan-14, 9:36 am)
பார்வை : 455

மேலே