மௌனம்
முதன்முதலாய்
முகம் பார்த்து பேசும்
மணவாளனுக்கு
பதில் பேசாத
பெண்மையின் மௌனம்
"நாணம்"
இதுவரை பழகிடாத
எதார்த்தத்தை
பிடித்தவருக்காக
ஏற்றுக்கொள்ளும்போது
பெண்மையின் மௌனம்
"தியாகம்"
சொல்லித் தீர்த்துவிட
வேண்டிய விஷயத்தை
சொல்ல முடியாமலே
போன சூழ்நிலையில்
பெண்மையின் மௌனம்
"கண்ணீர்"